NULM
அன்புடையீர் ,
தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் தெருவோர வியாபரிகளை ஒழுங்கு படுத்துதல் சட்டம் 2014 (The Street Vendors Protection of livelihood and regulation of street vendors act 2014) இன் படி சாலையோர வியாபாரிகளை நகராட்சி மூலம் கணக்கெடுத்து பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் செய்ய உழவர்கரை நகராட்சி உத்தேசித்துள்ளது. இதன்படி கடந்த 2020-ம் ஆண்டு 920 சாலையோர வியாபாரிகளை கண்டறிந்து உழவர்கரை நகராட்சி மூலம் அடையாள அட்டை மற்றும் விற்பனை சான்றிதழ் வழங்கப்பட்டது. தொகுதிவாரியான சாலையோர வியாபாரிகளின் எண்ணிக்கை விபரங்கள் பின் வருமாறு:-
வ. எண் |
தொகுதி |
வியாபாரிகளின் எண்ணிக்கை |
||
ஆண் |
பெண் |
மொத்தம் |
||
1 |
உழவர்கரை |
77 |
99 |
176 |
2 |
கதிர்காமம் |
95 |
103 |
198 |
3 |
லாஸ்பேட்டை |
55 |
110 |
165 |
4 |
இந்திரா நகர் |
70 |
81 |
151 |
5 |
காலாப்பட்டு |
6 |
19 |
25 |
6 |
காமராஜ் நகர் |
50 |
70 |
120 |
7 |
தட்டாஞ்சாவடி |
41 |
44 |
85 |
|
|
394 |
526 |
920 |
மேலே குறிப்பிடப்பட்டுள்ள 920 சாலையோர வியாபாரிகள் பெயர் மற்றும் விபரங்கள் உழவர்கரை நகராட்சி NULM அலுவலகத்திலும் , உழவர்கரை இணையதளம் (http://oulmun.in/whatsnew.php / http://oulmun.in/NULM.php / http://oulmun.in/NULM_street_vendor_elections.php ) வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.
தற்பொழுது இயக்கத்திலுள்ள தற்காலிக நகர விற்பனை குழுவை (Provisional Town Vending Committee) நிரந்தர நகர விற்பனை குழுவாக (Permanent Town Vending Committee) மாற்றுவதற்கு 12 சாலையோர வியாபாரிகளின் பிரதிநிதிகளை தேர்வு செய்யப்பட வேண்டும். இதை தேர்தல் வைத்து முறையாக தேர்ந்தெடுக்க உழவர்கரை நகராட்சி உத்தேசித்துள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக 06.12.2022 அன்று நடைபெற்ற தற்காலிக நகர விற்பனை குழு கூட்டத்தின் மூலம் ஒப்புதல் பெற்ற விபரங்கள் பின் வருமாறு.
வ. எண் |
தொகுதி |
வியாபாரிகளின் எண்ணிக்கை |
தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் விவரங்கள் |
ஒதுக்கீடு |
||
ஆண் |
பெண் |
மொத்தம் |
||||
1 |
77 |
99 |
176 |
1 ஆண் / 1 பெண் |
SC(அட்டவணை வகுப்பினர்) |
|
2 |
95 |
103 |
198 |
1 ஆண் / 1 பெண் |
BC (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) |
|
3 |
55 |
110 |
165 |
1 ஆண் / 1 பெண் |
BC (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) |
|
4 |
70 |
81 |
151 |
1 ஆண் / 1 பெண் |
பொது |
|
5 |
6 |
19 |
25 |
1 பெண் |
பொது |
|
6 |
50 |
70 |
120 |
1 ஆண் / 1 பெண் |
பொது |
|
7 |
41 |
44 |
85 |
1 ஆண் |
பொது |
|
|
|
394 |
526 |
920 |
6 ஆண் / 6 பெண் |
|
தேர்தல் முக்கிய தேதிகள் :-
- 23 ஜனவரி , 2023 - வேட்ப்புமனு தாக்கல் தொடங்கும் நாள். (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உணவு இடைவேளை மதியம் 1:00 முதல் 2 மணி வரை)
- 6 பிப்ரவரி , 2023 - வேட்ப்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். (மாலை 5 மணி வரை)
- 7 பிப்ரவரி , 2023 - வேட்பு மனுவின் இறுதி பரிசீலனை நாள்.
- 9 பிப்ரவரி , 2023 - வேட்ப்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள். (மாலை 5 மணி வரை)
- 10 பிப்ரவரி , 2023 - இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் நாள்.
- 22 பிப்ரவரி , 2023 - தேர்தல் நடைபெறும் நாள் (காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை) மற்றும் முடிவுகளை அறிவிக்கும் நாள்(மாலை 6 மணி அளவில்).
- 10 மார்ச் , 2023 - நகர சாலையோர வியாபாரிகள் குழு முதல் கூட்டம் நடைபெறும் நாள். (மாலை 4 மணி அளவில்)
குறிப்பு:-
1. தேர்தல் நடக்க இருக்கும் இடம்:
நகர வாழ்வாதார மையம் ( முதல் தளம் ), நவீன சுகாதார மீன் அங்காடி , கிழக்கு கடற்கரை சாலை , கொட்டுப்பாளையம் , புதுச்சேரி – 605013.
2. மேலே குறிப்பிட்ட 12 உறுப்பினர்களுக்கு போட்டியிட விரும்புவோர் மற்றும் வாக்காளர்கள் உழவர்கரை நகராட்சியால் வழங்கப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கான 01.09.2020 ஆம் ஆண்டில் இருந்து 31.08.2023 ஆம் ஆண்டு வரை செல்லத்தக்க விற்பனை சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை உடையவர்களாக இருக்க வேண்டும். மேலும் இத்தகவல் உழவர்கரை நகராட்சி NULM Section தகவல் பலகையில் மற்றும் உழவர்கரை நராட்சியின் இணையத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. தேர்தலில் பங்கேற்க ஆர்வமுள்ள சான்றளிக்கப்பட்ட தெருவோர விற்பனையாளர்கள் தங்களது விற்பனை சான்றிதழ் அல்லது அடையாள அட்டையை காண்பித்து வேட்பு மனு படிவம் 1-ஐ (FORM-1) உழவர்கரை நகராட்சி தேர்தல் அதிகாரி திரு. பு. சரவணன், உதவி பொறியாளர் அவர்களிடம், அறை எண்.22 உழவர்கரை நகராட்சி அலுவலகம், ஜவஹர் நகர், புதுச்சேரி-05. அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
4. பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுவை கையொப்பமிட்டு உழவர்கரை நகராட்சி தேர்தல் அதிகாரி திரு. G. சரவணன், உதவி பொறியாளர் அவர்களிடம் அறை எண்.22 உழவர்கரை நகராட்சி அலுவலகம், ஜவஹர் நகர், புதுச்சேரி-05. அலுவலக நேரத்தில் நேரில் தாக்கல் செய்து ஒப்புகை ரசீது பெற்றுக்கொள்ள வேண்ம். வேட்பு மனுவுடன் வைப்புத்தொகையாக ரூ.2,000/- த்துக்கான தேசியமயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியின் வரையோலையை “‘The Commissioner NULM, Oulgaret Municipality’” என்ற பெயரில் எடுத்து அவசியம் தவறாமல் இணைத்திடல் வேண்டும்
5. இத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்யும் சாலையோர வியாபாரியை அதே சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த இரு சாலையோர வியாபாரிகள் முன் மொழிய வேண்டும்.
6. மேற்குறிப்பிட்ட வைப்புத்தொகை திரும்ப பெறத்தக்கதாகும் (Refundable). போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலில் பதிவாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகள் பெறவில்லை எனில் வேட்பாளர் செலுத்திய வைப்புத் தொகை திரும்ப வழங்கப்பட மாட்டாது.
7. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அவர்அவர் வியாபாரம் செய்யும் சட்டமன்ற தொகுதியில் தான் போட்டியிட முடியும்.
8. தேர்தலில் பேட்டியிட விரும்புவோர் அதே சட்டமன்ற தொகுதியை சேர்ந்த உழவர்கரை நகராட்சியால் சான்றளிக்கப்பட்ட ஒரு தெருவோர வியாபாரியை தேர்தல் முகவராக / வாக்கு என்னும் முகவராக நியமிக்கலாம்.
9. தேர்தல் நாளன்று வாக்களிக்க வருபவர்கள் உழவர்கரை நகராட்சியால் வழங்கப்பட்ட வியாபார சான்றிதழ் அல்லது அடையாள அட்டையை தவறாமல் எடுத்து வர வேண்டும்.
10. இந்திரா நகர், காலாப்பட்டு , காமராஜ் நகர், தட்டாஞ்சாவடி இந்த நான்கு தொகுதிகளும் பொது தொகுதியாகும் . இத்தொகுதிகளில் உழவர்கரை நகராட்சியால் சான்றளிக்கப்பட்ட தெருவோர வியாபாரி எத்தகைய இனத்தவராக இருந்தாலும் போட்டியிடலாம் .
11. உழவர்கரை தொகுதி அட்டவணை இனத்தவர்(SC)மட்டுமே போட்டியிடும் தொகுதியாகும் . இதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இரு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இருவருமே அட்டவணை இனத்தவராக இருக்க வேண்டும்.
12. கதிர்காமம், லாஸ்பேட்டை, இரு தொகுதிகளும் பிற்படுத்தப்பட்ட /பிறபிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC/OBC) போட்டியிடும் தொகுதிகளாகும், இதில் தலா ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இரு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அனைவருமே பிற்படுத்தப்பட்ட/ பிறபிற்படுத்தப்பட்ட வகுப்பினராக (BC/OBC) இருக்க வேண்டும்
13. உழவர்கரை, கதிர்காமம், லாஸ்பேட்டை, இந்திரா நகர், மற்றும் காமராஜர் நகர், தொகுதிகளில் வாக்காளர்கள் இரு வாக்குகள் அளிக்க வேண்டும். இத்தொகுதிகளில் தலா ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இரு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆதலால் இத்தொகுதி வாக்காளர்கள் தலா இரு வாக்குகள் அளிக்க வேண்டும்.
14. காலாப்பட்டு மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிகளில் முறையே ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டும். இவ்விரண்டு தொகுதிகளிலும் வாக்களிப்போர் ஒரு வாக்கு மட்டுமே செலுத்த வேண்டும்.
15. ஒதுக்கீடு செய்யப்பட்ட பொது தொகுதி அல்லாத தொகுதியில் போட்டியிட விரும்புவோர் தங்களது வேட்பு மனுவுடன் வேட்பாளரின் ஜாதிச் சான்றிதழை இணைக்க வேண்டும்.
16. வேட்பு மனு தாக்களின் போது இணைக்க வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு:-
• வேட்பாளரின் (Passport Size Photo 3 Nos) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3
• முன் மொழிபவர்கள் இருவருடைய (Passport Size Photo 2 Nos) புகைப்படம் இரண்டு.
• தேர்தல் முகவர் அல்லது வாக்கு எண்ணும் முகவரின் (Passport Size Photo 3 Nos) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3
• வேட்பாளரின் ஜாதி சான்றிதழ் (பொது தொகுதியில் போட்டியிடுவோர் சமர்ப்பிக்கத் தேவையில்லை)
• வேட்பாளர் முன் மொழிபவர்கள் இருவர் மற்றும் தேர்தல் முகவர் அல்லது வாக்கு எண்ணும் முகவரின் ஆதார் அட்டை நகல், உழவர்கரை நகராட்சியில் வழங்கப்பட்ட செல்லத்தக்க விற்பனை சான்றிதழ் நகல் மற்றும் ரூ.2000/-க்கான வரையோலையை (Demand Draft) ஏதாவது ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்“The Commissioner NULM, Oulgaret Municipality’”என்ற பெயரில் எடுத்து அவசியம் தவறாமல் இணைத்திடல் வேண்டும்.
17. ஜாதி சான்றிதழ் அவர் அவர்கள் வசிப்பிடத்திற்கான உரிய அதிகாரியிடம் 01.01.2022 தேதிக்குப்பிறகு பெறப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
18. தேர்தலின் முடிவில் இரு வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகள் பெற்றால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
19. மேலும் விளக்கத்திற்கு மேரி உழவர்கரையில் உள்ள பழைய உழவர்கரை நகராட்சி அலுவலகத்தின் NULM பிரிவின் அலுவலர்களை அலைபேசி எண். 9488447777 / 883857001 வாயிலாக தொடர்பு கொள்ள வேண்டும்.
G. சரவணன்
தேர்தல் நடத்தும் அதிகாரி
(சாலையோர வியாபாரக்குழு தேல்தல்)
உழவர்கரை நகராட்சி